கோவை மாவட்டம் அன்னூரில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை நடைபெறும். புரட்டாசி மாதம் காரணமாக, கடந்த சில நாட்களாக ஆடு, கோழி விற்பனை குறைந்திருந்தது. தற்போது புரட்டாசி முடிந்த நிலையில், அசைவ உணவு மீது ஆர்வம்காட்டி வருகின்றனர்.
மேலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, ஆடு விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி அன்னூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. அதிகாலையிலிருந்தே விறுவிறுப்பாக வியாபாரம் நடந்து வரும் இந்தச் சந்தையில் அன்னூர், புளியம்பட்டி மற்றும் கர்நாடக மாநலத்தில் இருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரபட்டுள்ளன.