ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் வியாபாரம் இன்று களைக்கட்டியது. இதனால்,சேலம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள கேரளா மாநிலத்திலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். ரமலான் பண்டிகை நெருங்குவதால், பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆடுகள் ரூ 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலும், மாடுகள் ரூ.10 ஆயிரம் 50 ஆயிரம் வரை விற்பனையானது.
பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் களைக்கட்டிய வியாபாரம்! - pollachi
கோவை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் ஆடு, மாடு, கோழிகள் வியாபாரம் இன்று களைக்கட்டியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தொடங்கியது ரமலான் -ஆடு வியாபாரிகள் மகிழ்ச்சி..!
இது குறித்து மாட்டு வியாபாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி மாட்டுச்சந்தை இரண்டாக உள்ளதால் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுவதாகவும், சந்தை ஒரே இடத்தில் இருந்தால் வியாபாரம் நன்றாக நடக்கும் என்றும் தெரிவித்தனர்.
Last Updated : May 30, 2019, 4:31 PM IST