கோவை மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 38 வயது மதிக்கத்தக்க பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இவர்களுக்கு 15 வயது மதிக்கத்தக்க மகள் உள்ளார். அச்சிறுமி அவரது தாயாருடன் தனியாக வசித்துவந்தார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை: தாயார் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை - கோவை
கோவை: சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தாயார் உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் அந்த பெண்மணிக்கு கோவை, வெங்கிடாபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு சுப்பிரமணியம் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 20/06/2017 அன்று சிறுமியின் தாயார் தூங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுப்பிரமணியன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி அவரது தாயாரிடம் சொன்னபோது சிறுமியை அவரது தாயார் சமாதானப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து அச்சிறுமி அவரது தந்தையின் வீட்டுக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் குறித்து சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 18/09/2018 அன்று புகார் கொடுத்ததன் பேரில் விசாரணை மேற்கொண்ட பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அன்புச்செல்வி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன் மற்றும் சிறுமியின் தாயாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த வழக்கு கோவை சிறப்பு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவு பெற்று நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார் அதில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனையும் சுப்பிரமணியத்துக்கு ரூபாய் 5000 மற்றும் சிறுமியின் தாயாருக்கு ரூபாய் 6000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.