தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்புணர்வு: 6 பேர் போக்சோவில் கைது - pollachil

கோவை: 14 வயது சிறுமியை பாலியல் வண்புணர்வு செய்து கர்ப்பம் ஆக்கிய 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஃப்ட்ச
ஃப்ட்ச

By

Published : Jul 21, 2021, 12:31 AM IST

பொள்ளாச்சியில் ஆறு மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் காதலிப்பதாக கூறி பழகியிருக்கிறார். காலப்போக்கில் அவர் தன் நண்பர்களுக்கு சிறுமியுடனான பழக்கத்தை கூறிய பிறகு மகரஜோதி, நாகராஜ், முத்து முருகன், பிரவீன் மற்றும் இருவர் என ஆறு பேர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரித்த கால் துறையினர் சிறுமியை 6 பேர் பாலியல் வன்புணர்வு செய்தது உறுதியானது. அதனடிப்படையில் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறைில் அடைத்தனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி கூறுகையில், ”கடந்த ஏழு மாதங்களில் பொள்ளாச்சியில் 15, வால்பாறையில் 4 என மொத்தம் 19 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெற்றோர்கள் குழந்தைகள் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும்போது அவர்களிடம் பெற்றோர் நண்பர்களாக அணுகி குறையை சரி செய்ய வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details