தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி அரசு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! - Government students struggle

கோவை அரசு மருத்துவமனை கல்லூரி முதுகலை மாணவர்கள் அவர்களது தேவைகளை அரசு கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

By

Published : Apr 3, 2021, 10:57 PM IST

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட முதுகலை மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு போதுமான மருத்துவ உபகரணங்கள் வழங்கிட வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஆய்வுகள் விரைவில் செய்து கொடுக்கப்பட வேண்டும். முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்குவதற்கான வசதிகளும், கழிப்பறை வசதிகளும், சுகாதாரமான உணவு வழங்கப்பட வேண்டும். மேலும் நிலுவையில் இருக்கும் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் கைகளில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், ‘தங்களது கோரிக்கைகளை அரசினுடைய கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த அமைதி போராட்டம் நடத்துவதாகவும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. தங்களது கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு சென்றோம். எனவே அரசானது அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:சட்டப்பேரவைத் தேர்தல்: சொந்தவூரில் வாக்களிக்க 2 லட்சம் பேர் பயணம்!

ABOUT THE AUTHOR

...view details