கோவை மாநகராட்சியில் கூலி உயர்வு வழங்க வேண்டி, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பல நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடமும் பல்வேறு மனுக்களை அளித்து வந்த நிலையில், இதற்காக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கூலி உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாததால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து, இன்று (அக்.25) முதல் தொடங்கினர்.