கோயம்புத்தூர்: மானாமதுரையைச் சேர்ந்த கேசவ்குமார் கல்லூரி மாணவர். வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி, கோயம்புத்தூரில் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்றுவந்தார். இந்நிலையில் இவர் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம், 'பணம் தரவில்லையானால் உனது புகைப்படங்களை ஆபாசமாக உருமாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன்' என மிரட்டி பணம் பறித்துவந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த ஜூன் 21ஆம் தேதி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கேசவ்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் மங்கையர்கரசி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.