தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் - இந்து முன்னணி கட்சி

கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசு விதித்த தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை இந்து முன்னணி சார்பில் கொண்டாடுவோம் என அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

hindu party
hindu party

By

Published : Aug 13, 2020, 10:39 PM IST

கோயம்புத்தூர் மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடை விதித்துள்ளது. ஆனால், இந்து முன்னணி சார்பில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும். தமிழ்நாடு அரசு அறிவித்த இந்தத் தடைக்கு இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

கிறிஸ்துவ விழாவிற்கு பல கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். பக்ரீத் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு எவ்வித தடையும் விதிக்கவில்லை. இந்த ஆண்டு அதிகக் கூட்டம் இல்லாமல், கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மதித்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் செத்துப் பிழைக்கும் மக்கள் - ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள்

ABOUT THE AUTHOR

...view details