கோவையில் சி.பி.எம் கட்சியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் , கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். கொடியேற்று விழாவுக்கு பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மக்கள் பிரச்னைகளை தீர்க்கவில்லை. 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை இழப்பு, பொருளாதார பிரச்னைகள் தற்போது ஏற்பட்டுள்ளது.
மலிவான விளம்பரத்திற்காக வள்ளுவர் சிலைக்கு காவி உடை போர்த்தி இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் அவமானப்படுத்தி இருக்கின்றார். அவர் மீது சாதாரண பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தப் பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.