கோவை மாவட்டம், அன்னூர் செங்கப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் கனகராஜ் - காஞ்சனா தம்பதி. இவர்களுக்கு இரண்டரை வயதில் அரும்பதா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் தம்பதி விளாங்குறிச்சியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் அரும்பதா பசியால் அழுததால், காஞ்சனா குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கியுள்ளார்.
அதிகாலையில் காணாமல்போன குழந்தை சடலமாக மீட்பு - Coimbatore
கோவை: விளாங்குறிச்சி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து இரண்டரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இன்று அதிகாலை நான்கு மணிக்கு மீண்டும் பால் கொடுக்க காஞ்சனா எழுந்திருந்தபோது, படுக்கையில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து வீடு, தெருக்களில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.