தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு: வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பிரார்த்தனை! - Lock down
இன்று முழு ஊரடங்கு காரணமாக கிறிஸ்தவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பிரார்த்தனை செய்தனர்.
![முழு ஊரடங்கு: வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பிரார்த்தனை! Online prayer](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:09:06:1619343546-tn-cbe-02-christians-pray-online-visu-tn10027-25042021103638-2504f-1619327198-724.jpg)
இந்த பொது முடக்கம் காரணமாக தேவாலயங்களில் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழிபாடு தடைபட கூடாது என்பதற்காக கோவை காந்திபுரத்தில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில் அரசு விதிமுறைகளின்படி, பொதுமக்களை ஆலயத்தின் உள்ளே அனுமதிக்காமல், அவர்கள் தங்களது வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் வழியாக பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
ஆயர் தலைவர் டேவிட் பர்ணாபஸ் இணைய வழியாக ஜெப கூட்டத்தை நடத்தினர். காந்திபுரம், ரத்தினபுரி, கணபதி, நரசிம்ம நாயக்கன்பாளையம் உட்பட கோவை மாநகரம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் வீட்டில் இருந்தவாறே இணையம் வழியாக பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதே போன்று கோவையில் பல்வேறு தேவாலயங்களில் இணையம் மூலமே ஜெப கூட்டம் நடைபெற்றது.