தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்

கோவையில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கள் காலை 6 மணிவரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இராசாமணி அறிவித்துள்ளார்.

ஆட்சியர் இராசமணி
ஆட்சியர் இராசமணி

By

Published : Jul 24, 2020, 8:55 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழ்நாட்டில் ஜூலை மாதம் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பின் காரணமாக கூடுதலாக சனிக்கிழமை(ஜூலை 25) மாலை 5 மணியிலிருந்து திங்கள்(ஜூலை 27) காலை 6 மணிவரை எந்தத் தளர்வுகளுமின்றி கோவையில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 966 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1,659 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 32 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:கொடைக்கானலில் முழு ஊரடங்கு!

ABOUT THE AUTHOR

...view details