தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவு, இலவச பாதுகாப்பு உபகரணங்கள் - பொள்ளாச்சி

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி இலவச முகக்கவசம், கபசுரக் குடிநீர், சானிடைசர் வழங்கப்பட்டது.

திமுக சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவு, இலவச பாதுகாப்பு உபகரணங்கள்!
திமுக சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவு, இலவச பாதுகாப்பு உபகரணங்கள்!

By

Published : Apr 13, 2021, 8:02 AM IST

தமிழ்நாட்டில் இரண்டாம் அலை கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர்பொதுமக்களுக்கு முகக்கவசம், சானிடைசர், கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர்.

திமுக சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவு, இலவச பாதுகாப்பு உபகரணங்கள்!

இதன் ஒரு பகுதியாக கோவை, தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிர் அணி துணை அமைப்பாளர் சண்முகப்ரியா ஏற்பாட்டில் பொள்ளாச்சி, வால்பாறை சாலையில் உள்ள ஆதரவற்ற முதியோருக்கு மதியம் அறுசுவை உணவு வழங்கி, இலவசமாக முகக்கவசம், கபசுரக் குடிநீர், சானிடைசர் உள்ளிட்டவைகளை மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் வழங்கினார். இதில் மரகதம், பாத்திமா, செல்வி, முத்துலட்சுமி மற்றும் நகர கழகத் துணை செயலர் கார்த்திகேயன் உள்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:கோவிட் தடுப்பூசி; அனைத்து மாநில ஆளுநர்களுடன் துணை குடியரசுத் தலைவர், பிரதமர் நாளை ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details