தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார் - 4 பேர் உயிரிழப்பு! - ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார்
கார்

By

Published : Oct 4, 2020, 10:47 AM IST

சத்தியமங்கலத்தில் இருந்து நேற்று(அக்.03) இரவு கோவை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார் ரங்கம்பாளையம் ஐயப்பன் கோயில் அருகே சென்றபோது, அதன் எதிரே சத்தியமங்கலம் நோக்கி சென்ற கார் மீது மோதியது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே அரவிந்த், ராஜன், மோகன் ராஜ், நவீன் குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மற்ற மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

இவ்விபத்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் காவல் துறையினர் கார்களின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி செய்தபிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து சிறுமுகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதிவேகமாக காரை ஓட்டி சென்றதே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details