நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்ய நாளை (மார்ச் 26) கடைசி தேதி என்பதால் வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி, கோவை நாடாளுமன்றத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கு.இராசமணியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறு, குறு தொழில்கள் ஜி.எஸ்.டி யால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், கோவையில் குடிநீர் விநியோகத்தை தனியார் ஆலைக்கு வினியோகிப்பதை கண்டிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.