தமிழ்நாடு

tamil nadu

தந்தம் திருடி விற்க முயன்ற நால்வர் கைது!

By

Published : Nov 5, 2019, 3:23 PM IST

கோவை: யானைத் தந்தங்களைத் திருடி விற்க முயன்ற நான்கு பேரை வனத் துறையினர் கைது செய்தனர்

elephant

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட குஞ்சூர்பதி மலைவாழ் மக்கள் கிராமம் அருகே 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார் ஈஸ்வரன் என்பவருடன் சேர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று இறந்த யானையின் உடலிலிருந்து தந்தத்தை எடுத்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக வீரபத்திரன் என்பவரிடம் தெரிவித்து, தந்தங்களை விற்க கோவலூரைச் சேர்ந்த தாமோதரன் என்பவரை அணுகியுள்ளனர்.

இதனிடையே தந்தங்களைக் கேரளாவில் விற்பதற்காக தங்கராஜ், மோகன்ராஜ் ஆகியோரை அணுகியுள்ளனர். பின்னர் தந்தங்களை சீலியூர் கிராம வன எல்லையில் மறைத்துவைத்துள்ளனர். அப்போது தங்கராஜ் அந்த தந்தத்தை மற்றவர்களுத் தெரியாமல் எடுத்துச் சென்று கேரளாவில் மறைத்துவைத்துள்ளார்.

இது தொடர்பாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த வாரம் கார்த்திக்குமார், வீரபத்திரன் ஆகிய இருவரைப் பிடித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே வனத் துறையினரால் தேடப்பட்டுவந்த ஈஸ்வரன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து மோகன்ராஜையும் பிடித்த வனத் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தந்தம் திருடி விற்க முயன்ற நால்வர் கைது!

அதில் வனப்பகுதியில் திருடிய யானை தந்தங்களை கேரளாவில் விற்க முயற்சி செய்து அந்த முயற்சி தோல்வியடைந்ததால் கேரளாவில் தந்தங்கள் மறைத்துவைக்கப்பட்டு உள்ளதாக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர் கேரள மாநிலம் கொச்சி சென்று கிணற்றுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஐந்து கிலோ எடையுள்ள இரண்டு அடி நீளம் கொண்ட தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து தங்கராஜ், மோகன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பிறந்து 15 நாள்களே ஆன பெண் குழந்தை ஆற்றில் புதைப்பு! - தந்தையின் கொடூர செயல்

ABOUT THE AUTHOR

...view details