தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Formula 4 Race: கோவையில் பார்முலா 4 பந்தயம் - களத்தில் சீறிப் பாய்ந்த கார்கள்! - கோவையில் கார் பந்தயம்

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜே.கே.டயர்ஸ் நிறுவனம் சார்பில், கரி மோட்டார் பந்தய சாலையில் பார்முலா 4 (Formula 4 race) கார் பந்தயம் நடைபெற்றது.

கார் பந்தயம்
கார் பந்தயம்

By

Published : Nov 21, 2021, 8:14 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் பந்தய சாலைகள் அல்லது பந்தய களங்கள் உள்ளன.

ஒன்று சென்னை அருகில் உள்ள இருங்காட்டுக் கோட்டையிலும், மற்றொன்று கோவையிலும் (கரி மோட்டார் பந்தய சாலை) உள்ளது.

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் பந்தய சாலையில் ஜே.கே.டயர்ஸ் நிறுவனம் (JK tyres) சார்பில் பார்முலா 4 பந்தயம் இன்று (நவ.21) நடைபெற்றது.

எல்.ஜி.பி கோப்பை சுற்று முடிவுகள்

எல்.ஜி.பி கோப்பையின் 2ஆவது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் 2ஆவது சுற்றில் திலிஜித் முதலிடத்தையும், டிஜில் ராவ் 2ஆவது இடத்தையும், சந்தீப் குமார் 3ஆவது இடத்தையும் பிடித்தனர். மூவரும் டார்க் டான் ரேஸிங் குழுவைச் சேர்ந்தவர்கள்.

3ஆவது சுற்றில் டிஜில் ராவ் முதலிடமும், முறையே 2ஆவது, 3ஆவது இடத்தை சந்தீப் குமார் மற்றும் அஸ்வின் தத்தாவும் பிடித்தனர்.

நோவிஸ் கோப்பை சுற்று முடிவுகள்

நோவிஸ் கோப்பையின் 2ஆவது சுற்று போட்டியில் ஸ்போர்ட்டின் ருகான் ஆல்வா முதலிடத்தையும், ஜேடன் பாரியட் இரண்டாம் இடத்தையும், டிடீஎஸ் ரேஸிங்கின் ஜோயல் ஜோசப் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

கோவையில் சிறப்பாக நடந்த பார்முலா 4 பந்தயம்

3ஆவது போட்டியில் ருகான் ஆல்வா முதலிடத்தையும், ஜேடன் பாரியட் இரண்டாம் இடத்தையும், கவுரவ் கோச்சார் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

கார் பந்தயம்

பின்னர் ராயல் என்பீல்ட் பைக் போட்டியில், கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த அன்பல் அக்தார் முதலிடம் பிடித்து அசத்தினார்.

ஆல்வின் சேவியர் என்பவர் 2ஆவது இடத்தையும், கோவையைச் சேர்ந்த ராஜ்குமார் 3ஆவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

பந்தயத்தில் கார், பைக்குகள் சீறி பாய்ந்த காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதையும் படிங்க: Jai Bhim Controversy: வருத்தம் தெரிவித்தார் ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல்!

ABOUT THE AUTHOR

...view details