கோயம்புத்தூர்:கோவை சுண்டகாமுத்தூர் பகுதியைச்சேர்ந்த அதிமுக ஆதரவாளர், நிரோஜ் குமார். இவர் தான் புதிதாக வாங்கிய ஆட்டோவை எடுத்துக்கொண்டு, அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியிடம் ஆசி வாங்க சென்றுள்ளார். அப்போது தான் புதிதாக வாங்கிய ஆட்டோவை ஓட்டி தனக்கு ஆசி வழங்குமாறு கேட்டுள்ளார்.
ஆதரவாளரின் ஆசைக்கிணங்க ஆட்டோக்காரரான எஸ்.பி. வேலுமணி - Coimbatore district news
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையைச் சேர்ந்த அதிமுக ஆதரவாளரின் ஆசையை நிறைவேற்ற அவர் புதிததாக வாங்கிய ஆட்டோவை ஓட்டினார்.
Etv Bharatஆதரவாளரின் ஆசைக்கிணங்க ஆட்டோ ஓட்டிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி
இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி நிரோஜ் குமாரின் ஆசையை நிறைவேற்றத் தயாரானார். பின்னர் ஆட்டோவை எவ்வாறு இயக்க வேண்டுமென கேட்டறிந்து, சிறிது தூரம் இயக்கி தொண்டரின் ஆசையை நிறைவேற்றினார். தற்போது எஸ்.பி.வேலுமணி ஆட்டோ ஓட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:தமிழ்நாடு அரசைக்கண்டித்து பாஜக எம்எல்ஏ உண்ணாவிரதப்போராட்டம் அறிவிப்பு