பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி கோவை இருகூரில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னையிலிருந்து வந்த அவருக்குக் கோவை விமான நிலையத்தில் டாக்டர் ஆர்.எம்.ஆர். பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ராம் மோகன் ராவ் பேசுகையில், "அரசுப் பணியில் சேர்ந்தவுடன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிட வாய்ப்பு கிடைத்தது. பெருமைமிக்க தலைவர் மாவட்டத்தில் பணி செய்வது குறித்து மகிழ்ச்சி அன்று முதல் அவர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.
நாளை மறுதினம் அவரின் பிறந்தநாள் என்பதால் அதற்கு முன்பாகவே கௌரவிக்கப்பட வேண்டும் என்று இன்று (அக். 28) தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளேன்" என்று கூறினார்.