கோயம்புத்தூர்:காரமடையை அடுத்துள்ள சீலியூர் மேடூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கைய கவுடர், இவரது மகன் சம்பத். இவருக்குச் சொந்தமாகவுள்ள இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னை, வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் சம்பத் அவரது தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா வளர்த்து விற்பனை செய்வதாக ஒருங்கிணைந்த குற்ற உளவுப்பிரிவு ஆய்வாளர் கமலி ஆனந்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காரமடை காவல் துறையினரின் உதவியுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற அலுவலர்கள், தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதைக் கண்டறிந்தனர். இது குறித்து, சம்பத்திடம் விசாரணை செய்ததில், தோப்பிற்கு தேங்காய்களை கொள்முதல் செய்ய வரும் கேரள வாகன ஓட்டுநர்களுக்கு கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.