தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறையில் கரடி தாக்கியதில் வன மேற்பார்வையாளர் ஒருவர் படுகாயம்! - வால்பாறையில் கரடி தாக்குதல்

வால்பாறை புது தோட்டம் பகுதியில் கள மேற்பார்வையாளரை கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறையில் கரடி தாக்கியதில் வன மேற்பார்வையாளர் ஒருவர் படுகாயம்!
வால்பாறையில் கரடி தாக்கியதில் வன மேற்பார்வையாளர் ஒருவர் படுகாயம்!

By

Published : Dec 6, 2022, 10:54 PM IST

கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட இஞ்சிபாறை - நல்லகாத்து பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக நான்கு பேரை கரடி ஒன்று தாக்கியது. அதனைத் தொடர்ந்து வால்பாறை புது தோட்டம் பகுதியில் கள மேற்பார்வையாளரை கரடி தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

உட்பிரியருக்குச் சொந்தமான புது தோட்டம் பகுதியில் பணிபுரிந்து வரும் முத்துக்குமார் 12ஆம் நம்பர் காட்டுப் பகுதியில் பணி மேற்பார்வையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது புதரில் இருந்து மறைந்திருந்த கரடி திடீரென தாக்கியது. இதில் முத்துக்குமாரின் இடது கை மற்றும் மணிக்கட்டு பகுதி படுகாயமடைந்தது.

இதனைக் கண்ட அப்பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூச்சலிட்டு அதனை விரட்டி அவரை காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வால்பாறையில் கரடி தாக்கியதில் வன மேற்பார்வையாளர் ஒருவர் படுகாயம்!

இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள், வால்பாறை நகராட்சி நகர மன்றத் தலைவி அழகு சுந்தர வள்ளி துணைத் தலைவர் த.மா. செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலை வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித் திரியும் கரடியைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி; கொண்டாடி வரும் யுவராஜ் ஆதரவாளர்கள்?

ABOUT THE AUTHOR

...view details