கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட்ட ஆழியார் வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமாக தோட்டம் ஒன்று உள்ளது. தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு இருப்பதாக வனத் துறைக்கு தோட்ட உரிமையாளர் தகவல் தெரிவித்தார்.
தனியார் தோட்டத்தில் 10 அடி மலைப்பாம்பு : லாவகமாக பிடித்த வனத்துறை - பொள்ளாச்சி
கோவை: ஆழியார் வனப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் 10 அடி மலைபாம்பை வனத் துறையினர் பிடித்துள்ளனர்.
File pic
இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த ரேஞ்சர் காசிலிங்கம் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் 10 அடி நீள மலை பாம்பைப் பிடித்தனர். பின் காசிலிங்கம் கூறுகையில், 'தற்பொழுது கோடைக்காலம் என்பதால் வெயிலின் தாக்கம் தாங்காமல் மலைப்பாம்புகள் நீர் நிலைகள் உள்ள தோட்டங்களுக்கு வரும்.
ஆகவே இதுபோன்று மலைப்பாம்பை பொதுமக்கள் கண்டால் உடனே வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிடிபட்ட மலை பாம்பை நவமலை அடர் வனப்பகுதியில் விடப்படும்' என தெரிவித்தார்