கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையை அடுத்த பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் என்.சி.எப் என்ற வனத்துறையில் பணியாற்றியவர் கார்த்திக் (24). இவர் கொடைக்கானலைச் சேர்ந்தவர், பணி நிமித்தமாக வால்பாறை பகுதியில் பணிபுரிந்துவந்தார்.
வனத்துறை அலுவலர் தூக்கிட்டு தற்கொலை! - வால்பாறையில் வனத்துறை அலுவலர் தூக்கி தற்கொலை
கோயம்புத்தூர்: வால்பாறையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Forest officer dead in valparai
இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் அவருடன் பணியாற்றும் நபர் எழுந்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், இது குறித்து உடனடியாக வால்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கார்த்திக் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.