தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை வால்பாறை, கொடைக்கானலில் காட்டுத்தீ; மூலிகைகள் சேதம்!

வால்பாறை அடுத்த அக்காமலை கிராஸ் ஹில்ஸ் புல் வெளிப்பகுதி மற்றும் கொடைக்கானல் பெரும்பள்ளம் ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது.

வால்பாறை, கொடைக்கானலில் பற்றிய காட்டுத்தீ - மூலிகைகள் சேதம்!
வால்பாறை, கொடைக்கானலில் பற்றிய காட்டுத்தீ - மூலிகைகள் சேதம்!

By

Published : Feb 27, 2023, 11:24 AM IST

வால்பாறை அடுத்த அக்காமலை கிராஸ் ஹில்ஸ் புல் வெளிப்பகுதி மற்றும் கொடைக்கானல் பெரும்பள்ளம் ஆகிய பகுதிகளில் பரவிய காட்டுத்தீ

கோயம்புத்தூர்: வால்பாறை அடுத்த கிராஸ் ஹில்ஸ் புல்வெளி பகுதியானது 1987ஆம் ஆண்டு வரை பி.கே.டி. கம்பெனியின் கையிலிருந்தது. பின்னர் 1996ஆம் ஆண்டு அப்பகுதி ‘இந்திரா காந்தி வனப் பூங்கா’ என மாற்றப்பட்டது. தொடர்ந்து 2006ஆம் ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசுகளால் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.

சுமார் 1,500 ஏக்கருக்குச் சொந்தமான வனப் பகுதியின் தொடர்ச்சியாக உடுமலைப்பேட்டையும், அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் மூணாறு பகுதியை ஒட்டி உள்ள மறையூரும் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மறையூர் பகுதியில் அடையாளம் தெரியாத நபரால் வைக்கப்பட்ட தீ மளமளவெனப் பரவி காட்டுத்தீயாக அக்காமலை கிராஸ் ஹில்ஸ் புல்வெளிக்குப் பரவியது.

இதனை அறிந்த வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலான சிறப்பு தீ தடுப்புக் குழுவினர், அப்பகுதியில் உள்ள தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதியில் அரிய வகையான மூலிகைச் செடிகள், பல வகையான மரங்கள், குருவிகள் மற்றும் பாம்புகள் ஆகியவை தீயில் கருகி உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

அதேநேரம் அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் இரண்டு நாட்களாக உணவின்றி, தண்ணீர் இன்றி அதனை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாகவே பகலில் அதிகப்படியான வெப்பம் நிலவி வந்தது. இந்த சூழலில் கொடைக்கானல் நகர் பகுதியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரும்பள்ளம் மற்றும் பெருமாள்மலை ஆகிய வனப்பகுதியில் நேற்று (பிப்.26) இரவு திடீரென காட்டுத் தீயானது பற்றி எரிந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தீயை கட்டுக்குள் வர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், வனப்பகுதியில் அமைந்துள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்கள் எரிந்து சேதமடைந்தன. தொடர்ந்து இன்றும் (பிப்.27) இந்த காட்டுத்தீ எரிந்து வருவதாலும், அதிகமான காற்று வீசுவதாலும் காட்டுத்தீயை அணைப்பதில் இயற்கை தடைகள் அதிகளவில் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:காப்பு கட்டும் ரசீதில் முறைகேடு: நத்தம் மாரியம்மன் கோயில் எழுத்தரை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை

ABOUT THE AUTHOR

...view details