தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மர வேரில் சிக்கிய சிறுத்தையை மீட்ட வனத்துறையினர் - மர வேரில் சிக்கிய சிறுத்தையை மீட்ட வனத்துறையினர்

கோவை: போளுவாம்பட்டி வனச்சரகம் அருகே மர வேரில் சிக்கிய சிறுத்தையை பொக்லைன் இயந்திர உதவியுடன் வனத்துறை ஊழியர்கள் பத்தரமாக மீட்டனர்.

leopard
leopard

By

Published : Jan 11, 2020, 11:34 PM IST

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான காட்டு யானைகள், சிறுத்தை, புலி, உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் மலைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று போளுவாம்பட்டி வனச்சரகம் முள்ளங்காடு பகுதியில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரகாளியம்மன் கோயில் அருகே சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டுள்ளது. வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, மர வேரில் சிக்கி சிறுத்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளது.

மர வேரில் சிக்கிய சிறுத்தையை மீட்ட வனத்துறையினர்

இதனையடுத்து வனத்துறை ஊழியர்கள் போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமிக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறைக் குழு பொக்லைன் இயந்திர உதவியுடன் மர வேர்களை அறுத்து சிறுத்தையை மீட்டனர். பின்னர் சிறுத்தை மலைப்பகுதிக்குள் ஓடியது.

இதையும் படிங்க: காவல் துறையினரை தாக்கிய நபர்கள் - சிசிடிவி காட்சி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details