கோவை சாய்பாபா காலனி ரகுபதி லே-அவுட் பகுதிகளில் சுமார் 5 குரங்குகள் சுற்றிவந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அச்சுறுத்தம் வகையில் சுற்றித்திரிவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துவந்தனர்.
வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்கள், துணிகளை எடுத்துச் சென்று அட்டகாசம் செய்யும் குரங்குகளைப் பிடிக்க கூண்டு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.
குரங்குகளைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டு இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் குரங்குகளைப் பிடிக்க கூண்டினை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி பேசுகையில், கரோனா காலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாததால் உணவு தேடி சுமார் ஐந்து குரங்குகள் இப்பகுதியில் சுற்றித்திரிந்தன.
குரங்குகளை பிடிக்க கூண்டுகளை வைத்த வனத்துறையினர் தற்போது குரங்குகள் எங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து கூண்டு வைத்துள்ளனர். குரங்கு நிச்சயம் பிடிபடும் என்று நம்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க:கொரோனா தாக்கம்: ஒரு வாழைப்பழத்திற்காக சாலையில் சண்டையிட்ட 100க்கும் மேற்பட்ட குரங்குகள்!