கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கல்லார் குடி தெப்பக்குள மேடு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களான காடர், இருளர், முதுவர், மலசர், மலை மலசர் ஆகிய இனத்தவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 18 செட்டில்மெண்ட் (மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி) உள்ளது. இங்கு 3000 மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மழையில் அடித்து செல்லப்பட்ட உடைமைகள்
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் வீடுகள், உடைமைகள் அனைத்தும் மழையில் அடித்துச் செல்லப்பட்டதால் உடனடியாக அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை தாய்முடி என்.சி. பிரிவில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வனத்துறையினர் குடியமர்த்தினார்.
வீட்டுமனைப்பட்டா வழங்க - ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர், வனத்துறை உயர் அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஈடுபட்டு தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க அரசுக்கு மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தனர்.