கோவை: வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் மளுக்க பாறை பகுதியில் குட்டியுடன் காட்டு யானை சாலையில் நின்று கொண்டிருந்தது. அந்த வழியாக சாலக்குடிக்கு வாகனங்களில் சென்றவர்கள் யானை சாலையில் நிற்பதை பார்த்ததும் வாகனங்களை நிறுத்தினர்.
யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் குட்டியுடன் சாலையிலேயே வெகு நேரமாக நின்று கொண்டிருந்தன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் தாய் யானை தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகள் வனப்பதிக்குள் சென்றதைப் பார்த்த வாகனங்களில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.