கோயம்புத்தூர்: பட்டி பெருமான் சைவ நெறி அறக்கட்டளையினர் ஆண்டு தோறும் கோவையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் மலர் வழிபாடு செய்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பட்டீஸ்வரருக்கு 400 கிலோ மலர்களால் மலர் வழிபாடு நடத்தப்பட்டது. இதில் அரியவகை மலராக கருதப்படும் பாரிஜாத மலர், தாமரை, வாடாமல்லி, அசோகம் போன்ற 200 வகையான மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மலர் வழிபாட்டில் பக்தர்கள், சிவாச்சாரியார்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோயிலை சுற்றி வளம் வந்தனர். பின்னர் மலர்களை கொடுத்து இசை வாத்தியங்கள் முழங்க, சிவ பாடல்கள் பாடி சிவனை வழி பட்டனர்.
இது குறித்து பட்டி பெருமான் சைவ நெறி அறக்கட்டளை உறுப்பினர் லட்சுமிபதி ராஜ் கூறுகையில், "25 ஆண்டுகளாக பேரூர் பட்டீஸ்வரருக்கு மலர் வழிபாடு செய்து வருகிறோம். சங்க காலம் முதல் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு இந்த மலர் வழிபாடு இருந்து வருகிறது. இந்த மலர்வழிபாடு குறித்து நக்கீரர் அவரது திருமுருகாற்றுப்படையில் குறிப்பிட்டிருக்கிறார்.