தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்கள் மூடப்பட்டதால் பூக்கள் விற்பனை பாதிப்பு

கோவையில் கரோனா தொற்றுப் பரவலை குறைக்கும் நோக்கில், கோயில்கள் திறக்க தடைவிதிக்கப்பட்டதால் பூக்கள் விற்பனையாகாமல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பூக்கள் விற்பனையாகாமல் கொட்டி வைக்கப்பட்டிருப்பது தொடர்பான காணொலி
பூக்கள் விற்பனையாகாமல் கொட்டி வைக்கப்பட்டிருப்பது தொடர்பான காணொலி

By

Published : Aug 9, 2021, 6:21 PM IST

கோவை: தமிழ்நட்டில் கரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கோவையில் கோயில்கள் திறக்க தடை, மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டன.

பூக்கள் விற்பனையாகாமல் கொட்டி வைக்கப்பட்டிருப்பது தொடர்பான காணொலி

அரசின் தளர்வு அறிவிப்புகளைத் தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகே கோவையில் பூ மார்க்கெட் உள்ளிட்டவை செயல்படத் தொடங்கி இருந்தன.

இந்நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கோவில்கள் திறக்க தடை உத்தரவு, சுப வைபவ நிகழ்ச்சிகள் இல்லாமை போன்றவற்றால் பூக்கள் விற்பனையாகாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details