கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்துவருகிறது. இந்நிலையில், பேரூரையடுத்துள்ள ஆற்றுமேடு பகுதியில் இருபுறமுள்ள தரைப்பாலமும் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆற்றுமேடு பகுதியில் 60 பேர் சிக்கிக்கொண்டனர். தகவலையறிந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டனர்.
நொய்யல் ஆற்றில் வெள்ளம் - 60 பேர் மீட்பு
கோவை: நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரூர் பகுதியில் சிக்கித் தவித்த 60 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.
நொய்யல் ஆற்றில் வெள்ளம்
நொய்யல் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கனமழை காரணமாக அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.