தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புன்னகை மன்னன்' படப்புகழ் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு; ஆர்ப்பரித்து கொட்டும் அருவி! - Valparai Trip

'புன்னகை மன்னன்' படம் எடுக்கப்பட்ட அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆர்பரித்து கொட்டும் அருவி
"புன்னகை மன்னன் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி"யில் வெள்ளம்

By

Published : Oct 13, 2021, 6:53 PM IST

Updated : Jun 27, 2022, 1:51 PM IST

கோவை:கேரளா மாநிலம் சாலக்குடியில் 'புன்னகை மன்னன்' திரைப்படம் எடுக்கப்பட்ட அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வால்பாறை - சாலக்குடி இடையிலான போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

வால்பாறையில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் வால்பாறையிலிருந்து கேரளமாநிலம், சாலக்குடிக்குச் செல்லும் வழியில் உள்ள பிரசித்திபெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழையால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கே.பாலசந்திரன் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' திரைப்படத்தின் சில காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'புன்னகை மன்னன்' திரைப்படப்புகழ் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு; ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி.!

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அதிரப்பள்ளி வழியாக வால்பாறை பகுதிக்கு வரும் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை

Last Updated : Jun 27, 2022, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details