வால்பாறை கல்லூரி மாணவர்கள் பலி கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த வால்பாறைக்குக் கல்லூரி மாணவர்கள் சிலர் குழுவாகச் சுற்றுலா சென்றுள்ளனர். அதில், ஐந்து மாணவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது.
போலீசாரின் தகவலின் படி, நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த நபில், வினித் குமார், தனுஷ், அஜய், சரத் எனத் தெரியவந்துள்ளது.
ஆற்றில் மூழ்கியவர்களின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை மூவரது உடல்கள் மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இருவரது உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சொந்த மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை!