தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கார் வெடித்து விபத்து வழக்கில் 5 பேர் கைது - Coimbatore accident

கோவை கோட்டைமேடு பகுதியில் கார் வெடி விபத்து வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை கார் வெடித்து சிதறியது தொடர்பாக ஐந்து பேர் கைது
கோவை கார் வெடித்து சிதறியது தொடர்பாக ஐந்து பேர் கைது

By

Published : Oct 25, 2022, 7:07 AM IST

கோயம்புத்தூர்: உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு நேற்றைய முன்தினம் (அக் 23), கார் வெடித்து இரண்டாக சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து நடைபெற்ற தீவிர விசாரணையில் உயிரிழந்தவர் உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷா முபின் (29) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து கோவை மாநகர பி4 உக்கடம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜமேஷா முபின் உடன் தொடர்பில் இருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27) மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவை கார் விபத்து... அடுத்தடுத்து வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்...

ABOUT THE AUTHOR

...view details