கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவில், மாநில அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சிறு, குறு தொழில்களில் குறைந்த வேலையாள்களை பயன்படுத்தி தொழில்களை தொடர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன் ஒருபகுதியாக கோவை உக்கடம் பகுதியில் உள்ள மொத்தம் மற்றும் சில்லரை மீன் விற்பனை கூடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் வியாபாரிகளும், அதைச்சார்ந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மீன் மார்கெட் நிர்வாகிகள் கூறுகையில்," 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 45 நாள்களாக மீன் மார்க்கட் திறக்கவில்லை. தற்பொழுது அரசு சில வழிமுறைகளை பின்பற்றி கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி தினமும் இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.