கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு அருகே காளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் கூலித்தொழில் செய்துவருகிறார். இவருக்கு வினிதா,கவிதா,சபிதா ஆகிய மூன்று மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் மூன்றாவது மகளான சபிதா தனது கிராமத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியங்காடு அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்தார்.
திருச்சி என்.ஐ.டி.யில் இடம் பிடித்த முதல் பழங்குடி மாணவி - முதல் பழங்குடி மாணவி
கோவை: முதல் முறையாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஜே.இ.இ தேர்வு மூலம் வெற்றி பெற்று திருச்சி என்.ஐ.டி.யில் இணைந்துள்ளார்.
மருத்துவப்படிப்பு படிக்க வேண்டும் என்று நீட் தேர்வு எழுதியுள்ளார், அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இருந்தபோதிலும் பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ., மெயின் தேர்வு எழுதியுள்ளார். அத்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்காக அவருக்கு திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) பி.டெக்.,கெமிக்கல் துறையில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த கிராமத்திலிருந்து முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சபிதா திருச்சியில் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், “எளிய குடும்பத்தில் பிறந்து நான் எவ்வித கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். இதேபோல் அனைவரும் முயன்றால் வெற்றி பெறலாம். எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர் அனைவருக்கும் நன்றி” என்றார்