தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை ஜல்லிக்கட்டில் பி.ஏ., ஆங்கில பட்டதாரி முதல் பரிசு - கோவை ஜல்லிக்கட்டு

கோயம்புத்தூர் ஜல்லிக்கட்டில் பி.ஏ., ஆங்கில பட்டதாரி முதல் பரிசை வென்றார்.

ஜல்லிக்கட்டு போட்டி
ஜல்லிக்கட்டு போட்டி

By

Published : Jan 21, 2022, 10:41 PM IST

கோயம்புத்தூர்: ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (ஜன.21) கொடியசைத்து தொடங்கிவைத்தார். காலை 7 மணி அளவில் இருந்து 5:30 மணி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் சுமார் 900 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

காலையிலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு காளைகள் வீரர்களுக்கு ஆட்டம் காட்டின. பல காளைகளை வீரர்கள் அடக்கினர். அவ்வப்போது மாடுபிடி வீரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆள்மாறாட்டம் நடைபெற்றது அதனை கண்டறிந்த விழா கமிட்டியினர் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டு போட்டி

முதல் பரிசு கார்

போட்டியின் போது காயமடைந்த வீரர்களை உடனடியாக மருத்துவ குழுவினர் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இதில் 21 காளைகளை அடக்கி மதுரை மாவட்டம் குருவித்துறை பகுதியை சேர்ந்த மணி முதல் பரிசான காரை வென்றார். இவர் ஆங்கில பி.ஏ., பட்டதாரி ஆவார்.

இரண்டாவது பரிசு இருசக்கர வாகனம்

அதனை தொடர்ந்து 19 காளைகளை அடக்கி மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் இரண்டாவது இடத்தை பெற்றார். அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது.

அமைச்சர் வாழ்த்து

மூன்றாவது பரிசாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திக் 18 காளைகளை அடக்கி இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார். பரிசு பெற்ற அனைவருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று உள்ளது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள். கரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தப் போட்டியானது நடைபெற்றது. இன்றைய தினம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு பெண்கள் மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளனர். அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது காளை முதல் இடத்தை பிடித்தது.

இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக் கழகத்தேர்வில் முறைகேடு - விசாரணை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details