கோவை தனியார் மருத்துவமனையின் பின் பகுதியில் உள்ள டயாலிசிஸ் பிரிவில், 40க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் அருகில் உள்ள மருந்து கிடங்கில், இங்கு புதன்கிழமை இரவு திடீரென கரும் புகை வெளியாகி, தீ பரவியது.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அப்பகுதியில் இருந்து நோயாளிகளை அருகே உள்ள பிரிவுகளுக்கு மாற்றினர். மேலும், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உதவி மாவட்ட அலுவலர் தவமணி உத்தரவின்பேரில் நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் 12 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர்.