தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீயணைப்புத் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு - கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூர்: தீயணைப்புத் துறையினர் சார்பில் அன்னூர் பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தீயணைப்புத் துறை
தீயணைப்புத் துறை

By

Published : Oct 18, 2020, 2:25 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும், முடிந்த வரை பொது கூட்டங்களை தவிர்க்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அறிவுறுத்தப்படுகின்றன.

அதே சமயம் கரோனாவில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பிரசுரங்களையும் அரசு வழங்கி வருகிறது. காவல் துறையினர், ரயில்வே துறையினர் சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

தீயணைப்புத் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பேருந்து நிலையத்தில் தீயணைப்புத் துறையினர் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். கொளுத்தும் வெயிலில் ’கரோனாவில் இருந்து பாதுகாப்போம், கரோனாவை கட்டுப்படுத்துவோம்’ என்ற பதாகைகளை ஏந்தியவாறு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், கரோனா தற்காப்பு நடவடிக்கைகளை ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

இதையும் படிங்க:நாகர்கோவிலில் கரோனா விழிப்புணர்வு!

ABOUT THE AUTHOR

...view details