தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலையில் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி தீவிரம்! - fire safety

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி தொடங்கியது
தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி தொடங்கியதுதீ தடுப்பு கோடு அமைக்கும் பணி தொடங்கியது

By

Published : Apr 6, 2020, 10:48 AM IST

கோடைக் காலத்தில் கடும் வெயில் காரணமாக, வனப்பகுதி, மலைப்பகுதிகளில் அடிக்கடி தீப்பிடிப்பது வழக்கம். தீ விபத்தில் பல வகையான மூலிகைச்செடிகள், தீயில் கருகி அழியும் நிலை ஏற்படும். இதைத் தடுப்பதற்காக, வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு கோட்டை ஏற்படுத்துவர்.

நிகழாண்டு கோடை காலம் தொடங்கவுள்ளதால், வனத்துறையினர் தீத்தடுப்பு கோட்டை அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி, கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தீ பரவாமல் இருப்பதற்கு வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை தீவிரமாக அமைத்துவருகின்றனர்.

கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள மலைப்பகுதிகளில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீத்தடுப்பு கோடுகளை சுமார் இரண்டு கிலோ மீட்டர் அளவிற்கு வனத்துறையினரால் அமைக்கப்பட்டது.

தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி தொடங்கியது

கோடை காலத்தில் அடிக்கடி வறட்சியானப் பகுதி, மலைப் பகுதிகளில் தீப்பிடிக்கும் அதிக வாய்ப்பு உள்ளதால், இந்தத் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக, அம்மாட்ட வனத்துறை அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

வனப்பகுதிகளில் தீ வேகமாகப் பரவினால் விரைவாக எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து வனத்துறையினருக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details