கோயம்புத்தூர்செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் சலூன் கடை நடத்தி வருவதுடன் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இன்று(மார்ச் 14) அதிகாலை தனது வீட்டின் முன் இருவரால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சசிகுமாரின் உடலை கைப்பற்றி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பைனான்ஸ் உரிமையாளரை கொலை செய்த இந்து முன்னணி நிர்வாகி கைது - பைனான்ஸ் உரிமையாளரை குத்திக் கொன்ற இந்து முன்னணி நிர்வாகி
கொடுக்கல் வாங்கல் தகராறில் பைனான்ஸ் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த இந்து முன்னணி நிர்வாகி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், சசிகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ராம் ஜி என்பவருக்கும் ரூ. 5 லட்சம் ரூபாய் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதன் காரணமாக ராம் ஜி, இளங்கோ என்பவருடன் சேர்ந்து இன்று சசிகுமாரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் சசிகுமாரை கத்தியால் குத்தும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க : மதுரையில் தம்பதி மீது மோதிய கார்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்...