தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூதாட்டிக்கு காப்பீடு தொகை வழங்காமல் அலைக்கழிக்கும் நிதி நிறுவனம்! - மூதாட்டிக்கு காப்பீடு தொகை வழங்காமல் அலைக்கழிப்பு

கோவை: கிராம சக்தி நிதி நிறுவனம் தனது வாடிக்கையாளரான மூதாட்டிக்கு ஒன்றரை ஆண்டுகளாக காப்பீடு தொகை வழங்காமல் அலைக்கழித்து வருகிறது.

insurance amount
insurance amount

By

Published : Nov 20, 2020, 6:24 AM IST

பொள்ளாச்சியை அடுத்த வஞ்சியாபுரம் பிரிவு ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (68). இவர் 2018ஆம் ஆண்டு பொள்ளாச்சி காவலர் குடியிருப்பு பகுதியிலுள்ள கிராம சக்தி நிதி நிறுவனத்தில் மகளிர் குழுக் கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரது ஜாமீன்தாரரான கணவர் இயற்கை எய்தியதையடுத்து, கடன் தொகையைக் காப்பீடு மூலமாக அந்நிறுவனம் பெற்றுள்ளது. மேற்கொண்டு பணத்தைக் கொடுக்க அவரிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு ஒரு மாதத்தில் வழங்க வேண்டிய எஞ்சிய காப்பீடு தொகையை ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் வழங்கவில்லை.

இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், "நான் ஜே.ஜே. நகரில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். கூலித் தொழில் செய்து பிழைத்து வருகிறேன். கிராம சக்தி குழுவில் கடன் வாங்கினேன். ஜாமீன்தாரரான என் கணவர் இறந்த பின்னர் மீதி தவனை தொகையைக் கட்டுவதற்குப் பதிலாக காப்பீடு தொகையைக் கொண்டு ஈடுசெய்து கொள்கிறோம், உங்களுக்கு காப்பீடு தொகை ஒரு மாதத்தில் வழங்கப்படும் என ஊழியர்கள் கூறினர். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னை அந்த நிறுவனம் அலைக்கழித்துவருகிறது.

மாதத்திற்கு மூன்று முறை அலுவலகம் வரச் சொல்லி, ஒவ்வொரு முறையும் ஆவணங்களைப் பெறுகின்றனர். கையொப்பமும் பெறுகின்றனர். ஆனால் இன்னும் எனக்கு சேரவேண்டிய காப்பீடு தொகையைத் தரவில்லை. எப்படியாவது வாங்கிக் கொடுத்து உதவுங்கள், நான் கணவரில்லாமல் கூலி வேலைக்குச் சென்று மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறேன்" என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

இதேபோல் இந்நிறுவனத்தில் 30 பேருக்கு காப்பீடு தொகை நிலுவை இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details