தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Exclusive: கல்லூரி இறுதியாண்டு மாணவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் கேப்டனாக தேர்வு! - Praveen Thiyagarajan Karunya University

காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் பிரவீன் தியாகராஜன், தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் கேப்டனாக (19 வயதிற்கு கீழ் ) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Exclusive: கல்லூரி இறுதியாண்டு மாணவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் கேப்டனாக தேர்வு!
Exclusive: கல்லூரி இறுதியாண்டு மாணவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் கேப்டனாக தேர்வு!

By

Published : Jul 19, 2022, 8:46 PM IST

கோயம்புத்தூர்: நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்தவர், பிரவீன் தியாகராஜன். இவர் காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இவர், தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இளையோருக்கான கிரிக்கெட் அணியின் (19 வயதிற்கு கீழ்) கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பிரவீன் கூறுகையில், “நீலகிரி மாவட்டம் உதகையில் எனது பள்ளி படிப்பை நிறைவு செய்தேன். பள்ளியில் படிக்கும்போதே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இருந்தது. என்னுடன் விளையாடியவர்கள் என்னை ஊக்கப்படுத்தியதால்தான் தற்போது கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

மாணவர் பிரவீன் தியாகராஜன் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் கேப்டனாக (19 வயதிற்கு கீழ் ) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

அனைவரும் முயற்சி செய்தால் கிரிக்கெட்டில் சாதிக்கலாம். கனவை நோக்கி பயணப்பட்டால் வெற்றி எளிது. எனக்கு தோனி தான் வழி காட்டி. பல்வேறு தோல்விகளை தழுவித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். சென்னை, ஹைதராபாத், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விளையாடியுள்ளேன். தேசிய அளவில் சாதிப்பேன்.

Exclusive: கல்லூரி இறுதியாண்டு மாணவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் கேப்டனாக தேர்வு!

சிறிய வயதில் பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஆல் ரவுண்டராக இருக்கிறேன். அனைவரையும் ஒருங்கிணைத்து அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன். முன்னதாக தமிழ்நாடு இளையோருக்கான அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கு காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் பிரவீனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

மேலும் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் பல்கலைக்கழகம் செய்யும் என உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜூனியர் விம்பிள்டள் - இளம் இந்தியா வீராங்கனை ஐஸ்வர்யா ஜாதவ் அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details