வங்கதேச விவகாரம் தொடர்பாக 1971ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வெற்றி பெற்று வங்கதேசம் தனி நாடாக உருவானது. போர் நடந்து முடிந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இன்று (பிப்.19) போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் தேஜஸ் Mi-17, An-32 விமானங்கள், சாரங், சூர்யா கிரண் ஹெலிகாப்டர்கள் வானில் மின்னல் வேகத்தில் பறந்தன.