கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள சேத்துமடை, ஆனைமலை புலிகள் காப்பகம் ஒட்டிய பகுதி என்பதால் காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு வனவிலங்குகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
இதனால் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து வனவிலங்குகளை விரட்டி வருகின்றனர். ஆனால் ஒருசிலர் சட்டவிரோதமாக அதிகளவிலான மின்னாற்றல் கொண்ட மின் வேலிகளை தங்களது விவசாய நிலங்களில் அமைத்துள்ளனர். இதனால் வனவிலங்குகள் மட்டுமின்றி, மனிதர்களும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சேத்துமடை அருகேவுள்ள போத்தமடை பகுதியில் செமனாம்பதி ஷாஜி என்பவருக்கு சொந்தமான விவசாயம் நிலம் உள்ளது. இதனை கார்த்திகேயன் என்பவர் குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வருகிறார். அவர் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகாமல் இருக்க அதிக மின்னாற்றல் கொண்ட மின் வேலிகளை சட்டவிரோதமாக அமைத்துள்ளார்.
இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பொள்ளாச்சி வனசரகத்தினர், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கார்த்திகேயன் அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ளது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக கார்த்திகேயனை கைது செய்த வனசரகத்தினர், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மின் வேலியை பறிமுதல் செய்த பின்னர் அவரை விடுவித்தனர்.
இதையும் படிங்க:உத்தரகாண்ட்டில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகிய நான்காயிரம் பெண்கள் - அதிர்ச்சி தகவல்