தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகைக்கடை ஊழியர்களுக்கு கரோனா

கோவை: 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் கல்யாண் ஜுவல்லரியில் பணியாற்றிய 51 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நகைக்கடை
நகைக்கடை

By

Published : Aug 18, 2020, 12:35 PM IST

கோவை மாவட்டம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது கல்யாண் நகைக்கடை. இந்த நகைக்கடையைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக நகைக்கடையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

பிறகு நகைக்கடையில் பணியாற்றி வந்த 90 ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 51 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொடிசியா வளாகம், கற்பகம் மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஒரே கடையில் 51 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், கடந்த ஒரு வாரத்திற்குள் நகைக் கடைக்குச் சென்று வந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் கரோனா தொற்று ஏற்படக் காரணமாக அமைந்த கல்யாண் நகைக்கடை நிர்வாகம் மீது, சுகாதாரத் துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் நகைக்கடை நிர்வாகம் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details