தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 20, 2020, 8:18 PM IST

ETV Bharat / state

டிவி பார்த்ததைக் கண்டித்ததால் சிறுமி தற்கொலை

கோயம்புத்தூர்: தொலைக்காட்சி பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி தற்கொலை
சிறுமி தற்கொலை

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் பலரும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வரும் நிலையில், தொலைக்காட்சி பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவை, பீளமேடு பகுதியில் வசித்து வரும் குமரகுருபரன், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தேவி. இவர்களது மகள் அனுஷ்கா, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சிறுமி தொடர்ந்து தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்ததாகவும், வீட்டு வேலையில் உதவாமல் இருந்ததாகக் கூறி அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் சிறுமியை தொலைக்காட்சியை அணைத்துவிட்டு குளிக்க செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குளியலறைக்கு சென்ற அனுஷ்கா நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை.

அதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது சிறுமி தூக்கிட்டு கொண்டதைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பீளமேடு காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பிரசவம் குறித்து பெண்களுக்குப் புரிதல் இருக்கிறதா? எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details