கோயம்புத்தூர் சிறுமுகை வனப்பகுதி பவானி சாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியிலுள்ள யானைகள் உணவிற்காகவும் தண்ணீருக்காவும் வருவது வழக்கம். இந்நிலையில் சிறுமுகை வனத்துறை ஊழியர்கள் மயில்மொக்கை என்ற பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளதை கண்டனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு பெண் யானை உயிரிழப்பு! - சிறுமுகை வனப்பகுதி
கோயம்புத்தூர்: சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பெண் யானை ஒன்று உயிரிழந்தது.
elephant
உடனே ஊழியர்கள் இதுகுறித்து தங்களது உயர் அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.
உயிரிழந்த பெண் யானைக்கு 26 முதல் 28 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. தொடர்ந்து யானையை உடற்கூராய்வு செய்ததில் இரத்த சோகை ஏற்பட்டு அதிகமாக இரத்தம் வெளியேறியதால் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை மருத்துவர் சுகுமார் தெரிவித்தார்.