தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நின்ற நிலையில் பெண் யானை உயிரிழப்பு.. கோவை வனத்துறை விசாரணை - elephant fight videos

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே பெண் யானை ஒன்று நின்ற நிலையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நின்ற நிலையில் பெண் யானை உயிரிழப்பு!
நின்ற நிலையில் பெண் யானை உயிரிழப்பு!

By

Published : Feb 3, 2023, 10:24 AM IST

கோயம்புத்தூர்:பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தோலம்பாளையம் காப்புக்காடு பகுதியில், பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் நேற்று (பிப்.2) வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நீலாம்பதி வனப்பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்திருப்பதை கண்டறிந்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தபோது, உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 20 வயது இருக்கலாம் என தெரிவித்தனர்.

மேலும் நின்ற நிலையில் யானை உயிரிழந்துள்ளதால், இதற்கான காரணத்தை கண்டறிய இன்று (பிப்.3) காலை உடற்கூராய்விற்கு உட்படுத்தப்படும் என வன கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த 20 யானைகள்.. கிருஷ்ணகிரி வனத்துறை எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details