தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை... - Female doctor commits suicide due to fear of NEET exam

மேட்டுப்பாளையத்தில் நீட் தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு அச்சத்தால் திருமணமான 6 வது மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை... pg neet aspirants doctor rasi commits suicide in coimbatore
நீட் தேர்வு அச்சத்தால் திருமணமான 6 வது மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை... pg neet aspirants doctor rasi commits suicide in coimbatore

By

Published : May 20, 2022, 11:34 AM IST

கோயம்புத்தூர்:மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் வயது 30 இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மருத்துவர்.ராசி வயது 27. இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. ராசி கடந்த 2020ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து முடித்துள்ளார்.

இந்தநிலையில், முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்காக நீட் தேர்வுக்குத் தயாராக மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து படித்துக் கொண்டிருந்தார். தேர்வு எழுதுவது குறித்து ராசியின் மனதில் பயம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று (மே.19) ராசி வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்கச் சென்றதாகத் தெரிகிறது.

பெண் டாக்டர் ராசி

ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் மதியம் சாப்பிட வராததால் சந்தேகமடைந்த அவரது தாயார் செந்தாமரை பிற்பகல் 3 மணிக்கு மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாகப் பார்த்தார்அப்போது ராசி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலை வேண்டாம்

இதனையடுத்து டிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்துகொண்ட டாக்டர் ராசியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: லாலு பிரசாத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details